திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் பொழுது பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி மணிகண்டன் நேற்று தப்பித்து ஓடினார். இதனால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து நெல்லை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து மணிகண்டனை தேடி வந்த நிலையில் இன்று பெங்களூர் அருகே வைத்து அதிரடியாக கைது செய்தனர்.