நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ராயன் என்ற திரைப்படத்தில் சகோதரரே துரோகியாகும் வன்முறை நிறைந்த திரைப்படமாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்பொழுது கூலிப்படைகளால் அதிகமான படுகொலை நடந்து வருகின்ற வேலையில் இந்த படத்துக்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு என பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.