கந்தர்வகோட்டையில் ஸ்ரீ வெள்ளை முனீசுவரர் கோயிலில் நடைபெற்று வந்த மண்டல அபிஷேக விழா நிறைவடைந்தது. கந்தர்வகோட்டையில் உள்ள வெள்ளை முனீசுவரர், ஸ்ரீகாளியம்மன், அடைக்கலம் காத்த அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டகப்படிதாரர்களால் தினசரி அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தன. விழாநாட்களில் தின கலை நிகழ்ச்சிகளும்,பெண்களின் கும்மியாட்டமும், இளைஞர்களின் கம்பத்தாட்டமும், கை சிலம்பாட்டமும் நடைபெற்றது. கந்தர்வகோட்டை கௌதமி தலைமையிலான கலைக் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாள்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்துச் சென்றனர். 48 ஆம் நாள் மண்டகப்படி நிறைவுநாளில் பத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.