அன்னவாசல் அருகே குவாரி குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். பொன்னமராவதி அரசமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் சங்கீதா. இவர், சிவகங்கை மாவட்டம், பூலங்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்நிலையில் அன்னவாசலை அடுத்த விளத்துப்பட்டி ஊரப்பட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு வந்த சங்கீதா, அதே ஊரில் உள்ள கல்குவாரி குளத்தில் குளிப்பதற்காக சென்றார். குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.புகாரின் பேரில் அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.