சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டாக்டர் கே.என்.ராவ் நினைவு மருத்துவமனை (சேலம் பாலி கிளினிக்) மற்றும் சேலம் மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டியை நடத்தின. இதில் 9 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஒரு குழுவாகவும், 12 முதல் 15 வயது மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர் மற்றொரு குழுவாகவும் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர் கே.என்.ராவ் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சேலம் பாலி கிளினிக் இயக்குனர் டாக்டர் ரேஷ்மி ராவ், சேலம் செஸ் அசோசியேசன் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.