மனைவியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.

Update: 2024-07-31 10:12 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்ற தீர்ப்பு கடந்த 19.06.2016- அன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபுஷ்பம் (26) என்பவரை குடும்ப பிரச்சனை காரணமாக கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் ராஜபுஷ்பத்தின் கணவரான மணிநகர் பள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (32) என்பவரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை குலசேகரன்பட்டினம் போலீசார் புலன் விசாரணை செய்து கடந்த 26.07.2016- அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றவாளியான நவீன்குமார் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302- பிரிவின்படி ஆயுள் தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 316- பிரிவின்படி 7- வருடம் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 1000/- அபராதமும் விதித்து சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

Similar News