கணினி பயன்பாடுகளில் தொழில்நுட்ப செயல்பாடுகள் கருத்தரங்கு

கணினி பயன்பாடுகளில் தொழில்நுட்ப செயல்பாடுகள் கருத்தரங்கு

Update: 2024-07-31 13:00 GMT
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறையின் சார்பாக “இன்றைய கணினி பயன்பாடுகளில் தொழில்நுட்ப செயல்பாடுகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் முனைவர் மு. கருணாநிதி தலைமை தாங்கினார். வணிகவியல் துறையின் தலைவர் கே. ஜி. செல்வன் வரவேற்புரை வழங்கினார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து சிறப்புரையாற்றினார் .மேலும் வணிகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி நர்மதா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அறிமுக உரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓமன் நாட்டின் பொருளாதார வணிக நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் பால் சுந்தர் கிருபாகரன் அவர்கள் பேசும்போது இன்றைய நவீன யுகத்தில் கணினித் தொழில்நுட்பம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அந்த வகையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்(AI) எனப்படும் சீரிய தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்தும் , அந்தத் தொழில்நுட்பத்தை மாணவிகள் கற்றுக் கொள்வதின் மூலம் அவர்கள் பயிலும் துறை சார்ந்து அவர்கள் மேற்கொள்ளும் சுயதொழிலில் இவ்வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு தொழிலை முன்னேற்ற பாதையில் லாபகரமாக செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்று மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.மேலும் இந்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வில் வணிகவியல் துறை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வின் இறுதியில் வணிகவேல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி திவ்யா நன்றியுரை கூறினார் மேலும் இந்த ஒரு நாள் கருத்தரங்கு விழாவை வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் அருள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

Similar News