மேட்டூர் உபரிநீரை ஏரிகளுக்கு விரிவுபடுத்த கோரிக்கை

மழைக்காலங்களில் மேட்டூர் உபரிநீரை விரிவுபடுத்தக்கோரி, கோட்டப்பாளையம் ஏரிநீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,விற்கு கோரிக்கை மனுஅளித்தார்.

Update: 2024-07-31 14:44 GMT
மேட்டூர் காவிரி உபரி நீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளுக்கு விரிவுபடுத்த கோரிக்கை.
இதுகுறித்து, அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு மேட்டூர் அணையின் உபரி நீரை அதிகப்படியான நீர் வரத்து காலங்களில் நிரப்பிடும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் தருவாயில் உள்ளது. இந்தத் திட்டத்தில் கடைசியாக 70 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள ஏரி வைகுண்டம் ஏரி ஆகும். இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கல்லேரி வழியாக நாமக்கல் மாவட்ட ஏரிகளான செண்பகமாதேவிஏரி, பள்ளக்குழிஅக்ரஹாரம்ஏரி, மங்களம்ஏரி, மல்லசமுத்திரம் பெரியஏரி, மல்லசமுத்திரம் சின்னஏரி, கோட்டப்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளிஏரி, வண்டிநத்தம் ஏரி, எருக்கலம்குட்டை ஏரியின் வழியாக கொன்னையாறு அருகில் திருமணிமுத்தாற்றில் சேர்ந்து விடும். இதற்காக எந்த இடத்திலும் வாய்க்கால் வெட்ட தேவையில்லை எனவே, மழைக்காலத்தில் வரும் மேட்டூர் அணையின் உபரி நீரினை இந்த ஏரிகளுக்கும் விரிவுபடுத்தி நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்திற்கும், குடிநீர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைத்திட நீர்வளத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Similar News