நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திண்டுக்கல்லுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதம்
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திண்டுக்கல்லுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதம்
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு நேற்று சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22658) இயக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்த நிலையில் இரவு 9:40 மணியளவில் அந்த ரெயில் திண்டுக்கல் அம்பாத்துறை ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அப்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ரெயில் அம்பாத்துறை ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் அம்பாத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லை வந்தடைந்தது. வழக்கமாக இரவு 10.15 மணிக்கு திண்டுக்கல் வந்தடைய வேண்டிய அந்த ரெயில் நேற்று 1½ மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு வந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.