திண்டுக்கல் குயின்சிட்டி ரோட்டரி சங்கம், ஒட்டன்சத்திரம் ரோட்டரி சங்கம் இணைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஆசை மகள் தாய்சேய் திட்டத்தின்படி உடைகள், கல்பட்டி, பூண்டு போன்ற பொருட்கள் வழங்கும் முகாம் நடந்தது. மருத்துவக்கல்லுாரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். டாக்டர்கள் வீரமணி, காயத்ரி முன்னிலை வகித்தனர். குயின்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கவிதா செந்தில்குமார், செயலர் பார்க்கவி சந்தோஷ் வரவேற்றனர். சங்க நிர்வாகி ஜானகி, மண்டல ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி பட்டேல், துணை ஆளுநர் சித்ரா ரமேஷ், ஒட்டன்சத்திரம் சங்க நிர்வாகிகள் சித்தார்த்தன், கிருபாகரன், விஜயன் பங்கேற்றனர்.