கால்பந்து போட்டி: திருமறையூர் அணி கோப்பையை தட்டிச் சென்றது..

நாசரேத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திருமறையூர் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

Update: 2024-08-03 03:13 GMT
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திருமறையூர் அணி கோப்பையை தட்டிச் சென்றது. திருமறையூர் மறுரூப ஆலயத்தின் 17 வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 35 வது ஆலய அசன பண்டிகையை முன்னிட்டு நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியின் புல்தரை மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தி னராக சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் கோயில்ராஜ் கலந்து கொண்டனர். இப்போட்டியை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் துவக்கி வைத்தார். பாலிடெக்னிக் பர்சார் தனபால் முன்னிலை வகித்தார். நாசரேத் மற்றும் அதில் சுற்று வட்டாரத்தில் இருந்து 14 அணிகள் பங்கு பெற்றது. இறுதிப் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் அணியினர் மற்றும் திருமறையூர் அணியினர் விளையாடினர். இதில் திருமறையூர் அணியினர் முதலாவது இடத்தை பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் திரும றையூர் அணிக்கு வழங்கினார். இரண்டாம் பரிசை திருமறையூர் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேவதாஸ் நாசரேத் மர்காஷிஸ் அணிக்கு வழங்கினார்.

Similar News