பட்டியலின இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், இந்த தீர்ப்பு சமூக நீதியை காக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பை வழங்கி வலு சேர்த்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.