தமிழ்நாடு டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் மெர்சண்ட் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம்
வடபெரும்பாக்கத்தில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட வேதி பொருட்கள் எளிதாக கொண்டு செல்ல முடியாமல் தடுக்கவும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் உரிய உரிமம் வழங்குவது குறித்தும் தமிழ்நாடு டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் மெர்சண்ட் அசோசியேசன் சார்பில் ஆலோசனை நடத்தியதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்
வடபெரும்பாக்கத்தில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட வேதி பொருட்கள் எளிதாக கொண்டு செல்ல முடியாமல் தடுக்கவும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் உரிய உரிமம் வழங்குவது குறித்தும் தமிழ்நாடு டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் மெர்சண்ட் அசோசியேசன் சார்பில் ஆலோசனை நடத்தியதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கிராண்ட் லைன் ஊராட்சியில் தமிழ்நாடு டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் மெர்ச்சன்ட் அசோசியேஷன் சார்பில் பிளாஸ்டிக் வார்னிஸ் பெயின்ட் மருந்து உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மூலப் பொருட்கள் சேமிக்கும் கிடங்கு மற்றும் தொழற்சாலைகள் உரிமையாளர்கள் மற்றும் காவல் துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் காவல் ஆணையர் சங்கர் தலைமையில் நடைபெற்றது இதில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைதுணை ஆணையாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் தீ விபத்து போன்றவை ஏற்படாமல் தடுப்பது குறித்தும் வேதிப்பொருட்களை பாதுகாப்பாக வைப்பது குறித்தும் உரிய உரிமம் பெறுவது குறித்தும் அவர்களிடம் ஆலோசனை வழங்கினர் மேலும் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களுடன் ஜிஎஸ்டி பில் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர் காவல்துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய முறையில் தங்களுக்கு விரைந்து வேதி மூலப்பொருட்கள் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேதி மூலப்பொருள் விற்பனை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். வடபெரும்பாக்கத்தில் மட்டும் 250 குடோன்கள் உள்ளதாகவும் மெத்தனால் உள்ளிட்ட பல்வேறு வேதி மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வேதிப்பொருட்களை பாதுகாப்பாக வைப்பது குறித்தும் சட்டம் விதிமுறை குறித்து ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர்களும் உரிமம் பெறுவது குறித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் மெத்தனால் போன்றவை வெளியே எளிதில் கொண்டு செல்ல முடியாமல் தடுப்பதற்கு ஆலோசனைகளை வழங்கியதாகவும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்