டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணித்து VAO க்கள் நாமக்கல் RDO அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளர் குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்

Update: 2024-09-20 11:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளர் குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மற்ற துறை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணிக்கக் கூடாது. கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஜனவரி.8–இல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏற்கெனவே கடந்த வாரம் செப்டம்பர் .9–இல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், 19–இல் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் வருகிற செப்டம்பர் 30–இல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட அளவில் சுமார் 150க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News