விருத்தாசலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விருத்தாசலம் வட்டாரத்தில் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் உளுந்து மற்றும் இதர பயறுவகைள் விதைப்பு செய்திட சரியான தருனமாகும். தற்பொழுது விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற வம்பன் 10, வம்பன் 11, எம் டியு1, ஆகிய உளுந்து விதை இரகங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது. விதை கிராமதிட்டம் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (பயறுவகை) உளுந்து விதைகள் 50% மான்ய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா நகல், ஆதார் எண், டெபிட் கார்ட் ஆகிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விதைப்பண்ணைகள் அமைத்திட விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்தில் தாங்கள் விதைப்பண்ணை பதிவு செய்து, மீண்டும் தரமான விதைகளை வழங்கினால் தங்களுக்கு அன்றைய மார்க்கெட் விலையுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (பயறுவகை) உற்பத்தி மானியமாக கிலோ ஒன்றிற்கு ரூபாய் 25 வழங்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.