ஆரணி ஹோஸ்ட் லயன் சங்கம் சார்பில் சேவை திருவிழா

ஆரணி செ.20 ஆரணி ஹோஸ்ட் லயன் சங்கம் சார்பில் விரிகதிர் முதல் வெண்ணிலவு வரை சேவை திருவிழா நடைபெற்றது

Update: 2024-09-20 12:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் விரிகதிர் முதல் வெண்ணிலவு வரை சேவை திருவிழா முன்னிட்டு ஆரணி தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில் தொழுநோய் சிகிச்சை பெற்று வரும் 25 நபர்களுக்கு அரிசி சிப்பங்களும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் சங்கத் தலைவர் மோசஸ் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆளுநர் அன்பரசு, 2ம் துணை ஆளுநர் உதயசூரியன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல நல திட்ட உதவிகளை வழங்கினர். இதில் லயன்ஸ் இயக்குனர் பி.நடராஜன் அரிசி சிற்பங்களை வழங்கினார். மண்டலத் தலைவர் மணிஷ் குமார், மாவட்ட அவை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் கமலக்கண்ணன், மாவட்டத் தலைவர்கள் எஸ்.சந்திரசேகர், கே.எஸ்.விஜயகுமார், வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வன் நிர்வாகிகள் சுகுமார் போளூர் சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News