2026 ம் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பேச்சு.

Update: 2024-09-20 12:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொங்கணாபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கொங்கணாபுரம் ஒன்றிய சேர்மேன் கரட்டூர் மணி, பேரூர் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி நகர செயலாளர் முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் அதிமுகச் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பேசும்போது, அதிமுக ஆட்சியின் போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை எதிர்த்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் ஆனால் திமுகவினரோ 100 ரூபாய் நாணயத்திற்கு விலை போய் விட்டனர் என்றும், அந்த நாணயத்தில் தமிழ் வாழ்க என இந்தியில் எழுதி இருப்பதை கொண்டாடபடுகின்றனர் என்றும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டி திமுக பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்தது உதாரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலைஞர் சமாதியில் கூழகும்பிடு போட்டது குறித்து விமர்சித்தார். தொடர்ந்து அதிமுக ஆட்சிக்காலத்தில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் விவசாய நிலங்களுக்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தும், 2000 மினி கிளினிக் தொடங்கியது, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். தொடர்ந்து வருகின்ற 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி உறுதியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்து பேசினார் ..

Similar News