அஞ்சூரில் கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அஞ்சூரில் கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-20 12:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அஞ்சூரில் கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அஞ்சூர் கிராமத்தில், கௌஷிக் & கோ ப்ளூ மெட்டல் நிறுவனத்தாரின் சாதாரண கல் குவாரி அமைக்கவும், அதே பகுதியில் பழனிசாமியி நிறுவனத்தாரின் சாதாரண கல் குவாரி அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அஞ்சூரில் உள்ள ரெங்கசாமி கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தனிநபர் இடத்தில் தற்காலிகமாக கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கல்குவாரி உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்குவாரி அமைத்தால் அப்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும் என கிராம மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதே சமயம், சமூக ஆர்வலர்கள் குவாரி அமைக்க உள்ள இடத்தில் குடியிருப்புகளும், குடிநீர் ஆதாரங்களும் இருப்பதால் அப்பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுமக்கள் கூறிய கருத்துக்களை வீடியோ ஆதாரங்களாக பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி, அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு அவர்கள் முடிவை மேற்கொள்வார்கள். என இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ஏற்பாடு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News