நொய்யல் அன்று இன்று திருப்பூரில் ஆவணப்பட வெளியீட்டு விழா!

"நொய்யல் அன்று இன்று" திருப்பூரில் ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-09-20 11:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
"நொய்யல்" அன்று, இன்று திருப்பூரில் ஆவணப் பட  வெளியீட்டு விழா திருப்பூரில் ஸ்டோரி பேட்டை தயாரிப்பில் "நொய்யல்" அன்று, இன்று என்ற தலைப்பில் ஆவணப் பட  வெளியீட்டு விழா காங்கேயம் ரோட்டில்  உள்ள தனியார் ஹோட்டலில் தயாரிப்பாளர் கானப்பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜீவநதி நோயால் சங்க நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் தமிழ் சங்க மோகன் கார்த்திக், தமிழ்நாடு அரசு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி கலாராணி, சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், குமரன் கல்லூரி முதல்வர் வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து இயக்குநர் புகழ் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- விளம்பர படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் போன்றவைகளை பண்ணிட்டு வருகிறோம். நாங்கள் எல்லாரும் திருப்பூரை சார்ந்தவர்களாக இருப்பதால் திருப்பூருக்கு ஏதாவது செய்ய வேண்டும். என எண்ணத்தோடு இதற்கு முன்னதாக மெரிட் முருகன் என்ற குறும்படம் மூலம்  7 சர்வதேச திரைப்பட விருதுகள் பெற்றோம். அதற்கான தேடுதலில் பயணிக்கும் போது தான் நொய்யலுக்கா ஒரு ஆவணப்படம் பண்ண தோனியது. அதனை தயாரிப்பாளர் தெரிவித்து பணிகள் தொடங்கினோம். மிக விரைவில் புதிய திரைப்படம் இயக்க உள்ளேன்.மேலும்  கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டிணைந்து நதிகள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி பாதுகாக்க வேண்டும். என தெரிவித்தார்.

Similar News