கொமாதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம்
கொமாதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம்
கொங்கு நாட்டு மக்களின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என போற்றப்படும் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் தெற்கு நகர செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் அசோக் குமார் மற்றும் வடக்கு நகர செயலாளர் சேன்யோகுமார் உள்ளிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரமுகர்கள் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் தலைமையில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர்சரவணன் நகர் மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் அடுப்பு ரமேஷ் மனோன்மணி செல்லம்மாள் தேவராசன் கலையரசி,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அனிதா வேலு ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.