திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மையங்களில் நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர்

Dindigul;

Update: 2025-12-18 03:45 GMT
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் என 5,168 பேர் எழுத உள்ளனர். 3 தேர்வு மையங்களான GTN.கலைக்கல்லுாரியில் 1800, SSM.பொறியியல் கல்லுாரியில் 2000, PSNA.பொறியியல் கல்லுாரியில் 1157 பெண்கள் உட்பட 1360 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2 தாள்களாக தேர்வு நடக்க உள்ளது. முதல் தாள் காலை 10மணி முதல் மதியம் 12.30 மணி , 2-ம் தாள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க 20 தேர்வர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News