சாலை போட்ட 2, மாதங்களிலேயே கந்தல் கந்தலாக சாலை, நெடுஞ்சாலைதுறையின் அலட்சியம்! நடவடிக்கை எடுப்பார மாவட்ட ஆட்சியர்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த சிறுவரலூர் கூட்ரோட்டில் இருந்து அருளம்பாடி வரை இரண்டு மாதம் முன்பு தான் தார்சாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், ஒப்பந்தக்காரர்களால் போடப்பட்டது, தற்போதுசாலை கந்தல் கந்தலாகி வரும் நிலையில் வெறும் பேஜ் வொர்க் மட்டுமே நடந்து வருகிறது,;
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுார் கூட்ரோட்டில் இருந்து அருளம்பாடி வரை போடப்பட்ட தார் சாலை படுமோசமாகி பேட்ச் ஒர்க் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுார் கூட்ரோட்டிலிருந்து அருளம்பாடி வரை சுமார் 3 கி.மீ., துாரம் தார்சலை 1 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்த சாலை உலகலப்பாடி அருளம்பாடி மங்கலம் ஆகிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது. கடந்த வாரம் பெய்த மழைக்கு சாலை தாக்கு பிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. அதனைத் தொடர்ந்து, சாலை பெயர்ந்த இடங்களில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டு வருகிறது. சாலை போடப்பட்ட 2 மாதத்திலேயே கந்தலாகி பேட்ச் ஒர்க் செய்யப்படுவதால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீதும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.