அரிவாள் மற்றும் பானை மேல் ஏறி நின்று அருள்வாக்கு!

பக்தி

Update: 2024-08-04 13:18 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பல வருடங்களாக பிரசித்தி பெற்ற சப்த கன்னிமார்கள், உருமநாதர், கருப்பர், சப்பாணி கருப்பர் கோயில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி 18 பெருந்திருவிழா வெகு விமர்சனையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று ஆடி 18 முன்னிட்டு கோயிலின் முன்பு ஏழு பொங்கல் பானையை வைத்து பொங்கல் இட்டு வழிபட்டனர். இதில் 70 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் கும்மியடித்தும், பக்தி பாடல்களைப் பாடியும் வழிபட்டனர். கோயில் முன்பாக 7 பானையில் பொங்கல் வைத்து வழிபட்ட பொழுது பொங்கல் பானையின் மீது உருமநாதர் வேடம் அணிந்த ஒருவர் பொங்கல் பானை மீது ஏறி நின்று பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பொங்கல் பானையில் இரண்டு முறை நடந்தே சென்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறும்பொழுது மூன்று கரை மக்களை அழித்து விடுவேன் என அருள் வாக்கு கூறி உருமநாதர் வேடமடைந்த நபர் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கருப்பர் வேடம் அணிந்து இருந்த நபர் அருள் வாக்கு கூறியவரிடம் அப்படி செய்து விடாதீர்கள் என கூறியதை அடுத்து சாமி சாந்தமடைந்து பானையை விட்டு கீழே இறங்கியது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பு போடப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில் இறங்கி பொதுமக்களுக்கு சப்பானி கருப்பர் அருள் பாலித்தார். இதனையடுத்து பெரிய கருப்பர் வேடமடைந்தவர் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த அரிவாளில் ஏறி நின்று பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறியும் பிள்ளை வரம் இல்லாதவர்கள் திருமணமாகாதவர்களுக்கே அருள் வாக்கு கூறியும் திருநீர் வழங்கினார். புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்கலூரில் பொங்கல் பானையின் மீது நடந்து சென்றும் அரிவாளில் ஏறி நின்றும் அருள்வாக்கு கூறி நடைபெற்ற திருவிழா அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பலரும் கலந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News