புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பழுதாகி நின்ற லாரி மீது சனிக்கிழமை இரவு பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். கந்தர்வகோட்டை வட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் பூமிநாதன் (20). இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (21), பிரவீன் (21) ஆகியோர் புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.மழையூர்- துவார் சாலையில் வந்தபோது பழுதாகி நின்ற லாரி மீது பைக் திடீரென மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மூவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பூமிநாதன் ஏற்கெனே இறந்தது தெரியவந்தது. மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். மழையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.