சேலம் மாவட்ட தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் (நாம்) சார்பில் பொதுக்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நடந்தது. நாம் இயக்க மாவட்ட தலைவர் ஜி.ஏ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பச்சியாண்ணன் வரவேற்றார். மேச்சேரி ஒன்றிய தலைவர் பிரபாகரன், ஏற்காடு ஒன்றிய தலைவர் உமாபதி, தாரமங்கலம் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக நாம் இயக்க மாநில செயலாளர் ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மேட்டூர் அணை உபரிநீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவிப்பது, 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருக்கும் ஏற்காடு, கருமந்துறை, மற்றும் கல்வராயன் மலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். தென்னை, பனை மரங்கள் ஏறும் இளைஞர்களை ஊக்குவிக்க அரசு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.