பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்.மருதமுத்து, தலைமையாசிரியர் மரகதம், மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் Dr. வனிதா மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல் ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடம் பேசிய உதவி ஆய்வாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் பெண்குழந்தைகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து விடபட பெண்குழந்தைகள் கடினமாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து சமுதாயத்தில் அரசு அதிகாரிகளாக தகுதி பெற வேண்டும் என்றும் கூறினார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) ஏற்படுத்தப்பட்டது.