வயநாடு நிலச்சரிவுக்கு சேமிப்பு பணத்தை ஒப்படைத்த குழந்தைகள்
உண்டியல் பணம் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்டம் டவுன் செண்பகம்பிள்ளை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் குழந்தைகள் அபிநயா, செல்வன் ஆகியோர் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த 4488 ரூபாயை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் இன்று வழங்கினர். இந்த நிகழ்வின் போது குழந்தைகளின் தந்தை சுந்தரராஜ் உடன் இருந்தார்.