வீரராக்கியத்தில் மக்கள் உடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.

வீரராக்கியத்தில் மக்கள் உடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.

Update: 2024-08-06 07:26 GMT
வீரராக்கியத்தில் மக்கள் உடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தில், பல்வேறு திட்டங்களுக்காக அரசுத்துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு தீர்வு காண்பதற்கு பதிலாக, பொதுமக்களை தேடி அரசுத்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து அவர்களது குறைகளை தீர்த்து வருகின்றனர். இதன் அடிப்படையில், இன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாலாராஜபுரம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக வீரராக்கியம் பகுதியில் உள்ள சுவாதி மஹாலில் இன்று முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு பெறுதல், வர்த்தக உரிம்ம் பெறுதல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்குதல் போன்ற திட்டங்களுக்கு தேவையான ஆதார சான்றுகளுடன் விண்ணப்பித்தால் உடனடியாக பரிசீலித்து அங்கேயே அவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாலராஜபுரம் மற்றும் ரங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை பதிவு செய்தனர்.

Similar News