மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி:விஷம் குடித்த தொழிலாளி சாவு

போலீசார் விசாரணை

Update: 2024-08-06 08:37 GMT
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் வானக்காரன் காட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). தறி தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து மதுகுடித்து வந்தார். நேற்று மது போதையில் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரிமுத்து வழியிலேயே இறந்து விட்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News