பராமரிப்பு பணி:கடலூர் துறைமுகம்- காரைக்கால் ரெயில் இயக்கத்தில் மாற்றம்

ரெயில்வே கோட்ட அதிகாரி தகவல்

Update: 2024-08-06 08:40 GMT
கடலூர் துறைமுகம்- சிதம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளன, இதையொட்டி பெங்களூரு -காரைக்கால் தினசரி ரெயில் (16529) இன்று மற்றும் 7, 8, 9, 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இருந்து விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும், இந்த ரெயில் மேற்கண்ட தேதிகளில் விருத்தாசலத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லாது. இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் காரைக்கால் - பெங்களூரு தினசரி ரெயில் (16530) நாளை மற்றும் 8, 9, 10, 12 ஆகிய தேதிகளில் விருத்தாசலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வரை இயக்கப்படும், இந்த ரெயில் காரைக்காலில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் இயக்கப்படாது மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News