அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவிலை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவிலை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம்.இலுப்புலி கிராமம் மாரப்பம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்புலி கிராமம் மாரப்பம்பாளையம் அருந்திய தெரு அருகாமையில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது இந்நிலத்தில் காளியம்மன் கோவில் வைத்து கடந்த 30 வருடங்களாக வழிபட்டு வருகின்றனர் இதன் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் தனிநபர் ஒருவர் கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்து மண்ணைக் கொட்டி பாதை அமைத்துள்ளார் இதனை அளவீடு செய்து தகுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியின் அடிப்படையில் அளவிடும் செய்யப்பட்டுள்ளது பின்னர் காளியம்மன் கோவில் இடத்தை அரசு பதிவேற்றில் ஏற்றம் செய்ய வேண்டும். ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ள இடத்தினை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ். எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம். கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன். மூத்த தோழர். பெரியசாமி. ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ்.கிட்டுசாமி . பாலகிருஷ்ணன் ஈஸ்வரன் ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக வருவாய் ஆய்வாளர் அனுராதா அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இதனிடயே பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.