நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வடவயல் கிராமத்தில் சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வடவயல் கிராமத்தில் சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு

Update: 2024-08-07 12:03 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வடவயல் கிராமத்தில் சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டும் யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்... நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள தொரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் உணவு தேடி கிராம பகுதியில் அருகே உலா வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வடவயல் பகுதியில் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் நுழைந்த போது சேற்றில் சிக்கி உள்ளது. இதனை அடுத்து இன்று காலை தோட்ட உரிமையாளர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது காட்டு யானை சேற்றில் சிக்கி உயிரிழந்திருப்பதை கண்டு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டும், பின்னர் சேற்றில் சிக்கிய காட்டு யானையின் உடலை மீட்டு வன கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வடவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வெளியேறி உலா வருவதோடு இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க அகழிகள் அமைக்கவும், வனத்துறையினர் இரவு நேர வாகன ரோந்துகளில் ஈடுபட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Similar News