கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா.ஆண்டாள் தாயாருடன் எம்பெருமான் தங்க தொட்டியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-08-07 16:23 GMT
பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா.ஆண்டாள் தாயாருடன் எம்பெருமான் தங்க தொட்டியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் ஆரணி ஆற்றங்கரையோரம் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கரிகிருஷ்ண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக ஆண்டாள் தாயாருடன் தங்க தொட்டியில் எழுந்தருளிய கரிகிருஷ்ண பெருமாள் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முன்னதாக ஆண்டாள் தாயாருடன் கரிகிருஷ்ண பெருமாளுக்கு பட்டாச்சார்யார்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மஹாதீபாராதனை காட்டினர்.இதையடுத்து வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க எம்பெருமான் ஆலயத்தில் பிரகாரவுலா வந்தார்.இதனை தொடர்ந்து மாடவீதிகளில் வீதிவுலா வந்த கரிகிருஷ்ண பெருமாள் ஆண்டாள் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News