திருச்செங்கோட்டில் முதல்முறையாக விவசாய கண்காட்சி துவக்கம்
திருச்செங்கோட்டில் முதல்முறையாக விவசாய கண்காட்சி துவக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுவேலூர் ரோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ராசி அக்ரிமார்ட் நிறுவனத்தினர், பொன்னி சுகர் ஈரோடு, ராசிபுரம் ஸ்ரீ அம்மன் ட்ரேடர்ஸ், ஆகியோருடன் இணைந்து நடத்திய விவசாய கருவிகளுக்கான 3 நாள் கண்காட்சி துவக்கம். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்,திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கண்காட்சியைரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான கருவிகள் என்னென்ன உள்ளன என்பதை பார்வையிட்டனர். கண்காட்சி அரங்குகளில் அனைத்து விதமான விவசாய இயந்திரங்கள் மற்றும் புதிய அறிமுக கருவிகள் அரங்குகள்,நீர் சிக்கனம் சிக்கன ஊறப் பயன்பாடு குறைந்த வேலையாட்கள் விரைவாக பயிர் முதிர்ச்சி,ஆற்றல் மற்றும் மின்சார சேமிப்பு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு அதிக மகசூல் அதிகபட்ச நிகர வருமானம் தரக்கூடிய புதிய முறையிலான சொட்டு நீர் பாசன அரங்குகள்,மத்திய மாநில அரசுகள் வழங்கும் சிறு குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100% மானியம் இதர விவசாயிகளுக்கு 75% மானியம்ஆகியல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் சொட்டுநீர் பாசனத்திற்கான குழாய்கள் உபகரணங்கள்,வீரிய ஒட்டு ரக கொய்யா பர்மா தேக்கு செம்மரம்,விற்கும் அரங்குகள் விவசாயம் மற்றும் கால்நடை பண்ணை கருவிகள் தீவனம் வெட்டும் இயந்திரத்திற்கான அரங்குகள் புது விதமான பால் கறவை எந்திரங்களுக்கான அரங்குகள் கலை வெட்டும் கருவிகள்உர தெளிப்பான்கள் உள்ள அரங்குகள்குழி தோண்டும் கருவிகள் என நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனை பார்த்து பயன்பெறுவார்கள் எனவும் திருச்செங்கோட்டில் இதுபோல் கண்காட்சி முதன்முறையாக நடத்தப்படுவதாகவும் நிகழ்ச்சிமற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லியப்பன் தெரிவித்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில்திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில்,மாநில விவசாய அணி சந்திரசேகர்,எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கொங்கு கோமகன் மாவட்ட நிர்வாகி லாவண்யா ரவி, நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, அசோக் குமார், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், அண்ணாமலை, முருகேசன்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் விவசாயிகள் பலரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயன் பெற்றனர்.