தூத்துக்குடியில் ₹10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி கடல் பகுதி வழியாக தொடர்ந்து இலங்கைக்கு போதை பொருட்கள், பீடி இலைகள் ,மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த கடத்தலை தடுக்க அவ்வப்போது கியூ பிரிவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஜீவ மணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் 30 கிலோ வீதம் சுமார் 42 மூட்டைகளில் பீடி இலை பண்டல்கள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சம் எனத் தெரிகிறது. இதையடுத்து பீடி இலைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.