கரூரில் திராவிட எழுச்சி பேரவை நடத்தும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது.
கரூரில் திராவிட எழுச்சி பேரவை நடத்தும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது.
கரூரில் திராவிட எழுச்சி பேரவை நடத்தும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள ரவீஸ் மஹாலில் திராவிட எழுச்சி பேரவையின் தலைவர் சக்திவேந்தன் தலைமையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாநில பேரவை செயலாளர் ரஜினிகாந்த், மாநில பொது செயலாளர் ராஜேந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான்விஜய், மாநில அமைப்பு செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கண்மணி, மகளிர் அணி தலைவர் மல்லிகா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேரவையின் கொள்கை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கி கூறினர். மேலும், கொங்கு மண்டலம் முழுவதும் 500 கிராமங்களில் திராவிட எழுச்சி பேரவை கொடிக்கம்பம் நடுவது எனவும், அருந்ததியர் சமூகத்திற்கு 3% இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்பதாகவும், அதேசமயம் 6- சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனவும், இந்தியா முழுவதும் மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.