தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் ஆலோசனை கூட்டம்
தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் ஆலோசனை கூட்டம்
தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் அறிமுகம், தலைவர் கேப்டன் பிறந்தநாள் விழா, மற்றும் கழக வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருச்செங்கோடு சேலம் ரோட்டில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில், திருச்செங்கோடு நகர செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், பாலச்சந்தர், தனலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் மந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் விஜய்சரவணன் புதிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார் பின்பு வருகிற ஆகஸ்ட் 25 தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினம் சிறப்பாக கொண்டாடுவது எனவும் மேலும், வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும், கழக வளர்ச்சிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார், இக்கூட்டத்தில் தீர்மானங்களாக இராசிபுரம், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அமைப்பது மக்களிடத்தில் கருத்து கேட்டு இறுதி முடிவு தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும், மேலும் குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் காவேரி கரையோரம் இருக்கும் பொது மக்களுக்கு அதிகப்படியான நீர் வரத்து காரணத்தினால் அந்த பகுதியில் தற்போது போதுமான பாதுகாப்பு நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் எனவும், மேலும் தமிழக அரசு தமிழக மக்களின் மீது அதிகப்படியான வரி சுமை மின் கட்டண உயர்வு அத்தியாவாசி பொருட்கள் வரி உயர்வு திரும்ப பெற வேண்டும் எனவும், மேலும் தமிழகம் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருளுக்கும் வளர்ச்சி மாநிலமாக இருப்பதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி பேசினார், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குமாரபாளையம் நகர செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் பள்ளிபாளையம் வடக்கு மணியண்ணண், தெற்கு சக்திவேல், திருச்செங்கோடு வடக்கு நாகராஜ், தெற்கு தர்மராஜன், வெண்ணந்தூர் கிழக்கு சுப்பிரமணி, மேற்கு முரசுமுருகானந்தம், இராசிபுரம் மேற்கு வேல்முருகன், நாமகிரிப்பேட்டை தமிழ்ச்செல்வன், மல்லசமுத்திரம் ஒன்றிய பொருளாளர் சௌந்தரராஜன், பேரூர் செயலாளர்கள் ஆலம்பாளையம் முரளி, பட்டணம் குமார், புதுப்பட்டி மூர்த்தி, சார்பு அணி நிர்வாகிகள், கேப்டன் மன்றம் கோபி, பழனிவேல், இளைஞர் அணி தங்கம், சரவணன், மணிகண்டன், மகளிர் அணி அலமேலு, தமயந்தி, மாணவர் அணி பூபதி, சரவணன், ஞானபிரதீப், வர்த்தக அணி சுரேஷ், சக்திவேல், வடிவேல், செல்வராஜ், விவசாய அணி சிவக்குமார், ராஜா, நெசவாளரணி ரமேஷ்குமார், முனியப்பன், கணேசன், தங்கவேல், இளமுருகன், தொண்டரணி செல்வராஜ், சரவணகுமார், பாஸ்கர், மணிகண்டன், விமல்ராஜ், தொழிற்சங்கம், சதீஷ்குமார், மேலும் கழக நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.