மார்கழி மாத அமாவாசை வழிபாடு சதுரகிரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத அம்மாவாசை முன்னிட்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் சென்றனர்;

Update: 2025-12-20 05:59 GMT
மார்கழி மாத அமாவாசை வழிபாடு சதுரகிரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலை உள்ள சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் காத்திருந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம்,சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, பிளாவடி கருப்புசாமி மற்றும் 18 சித்தர்களுக்கு மாலை 4 மணிக்கு மேல் 18 வகை யான அபிஷேகம் செய்யப் பட்டு, அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுந்தர மகாலிங்கம் பு ஷ்ப அலங்காரத் திலும், சந்தன மகாலிங்கம் சந்தனக் காப்பு அலங்காரத் திலும் பக்தர்களுக்கு -அருள்பாலித்தனர். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News