அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய நூலக தினம் கொண்டாட்டம்

நூலகத் துறை விருது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

Update: 2024-08-13 10:04 GMT
இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தையான ரங்கநாதன் பிறந்த நாள், தேசிய நூலக தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் நூலக மேம்பாட்டுக்காக ரங்கநாதன் ஆற்றிய பங்களிப்பை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த நாளையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நூலக பிரிவானது விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பெரியார் பல்கலைக்கழக நூலக அறிவியல் துறையின் தலைவர் முருகன் கலந்து கொண்டு டிஜிட்டல் கல்வி அறிவு குறித்து பேசினார். சிறந்த நூலக பயன்பாட்டாளருக்கான விருதை துறை மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் நூலகவியலாளர் தங்கமணி, உதவி நூலகவியலாளர்கள் முரளி, பூபதி ஆகியோர் செய்து இருந்தனர்.

Similar News