பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட எஸ்பி

விழிப்புணர்வு

Update: 2024-08-13 15:14 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தொடர்ந்து பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. மேலும் சிறப்பான திட்டங்களான கிராம காவல், கல்வியும் காவலும், பயணம், போன்ற திட்டங்களின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி தலைமையில் இன்று 13.08.2024 -ம் தேதி வ.களத்தூர் கிராம பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Similar News