கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி தின சிறப்பு பூஜை நடந்தது. கச்சிராயபாளையம் சாலை அம்மன் நகர், ஆரா ஆனந்த சீனுவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராதா, ருக்மணி, கிருஷ்ணர் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.