கனரா வங்கி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
கனரா வங்கி சார்பில் டாக்டர் அம்பேத்கர் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
கனரா வங்கி சார்பில் டாக்டர் அம்பேத்கர் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது திருவள்ளூர் மாவட்டம் காரனோடையில் கனரா வங்கியின் சார்பில் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கனரா வங்கி இயக்குனர் திருமதி நளினி பத்மநாபன் அவர்களும் கனரா வங்கியின் பொது மேலாளர் திருமதி. K A சிந்து அவர்களும் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும், கல்வியில் சிறந்த மாணவிகளுக்கு தலா ரூ. 3,000 மற்றும் 5,000 ஊக்கத்தொகையாக வழங்கினர் தமிழகம் முழுவதும் மொத்தம் 5,232 பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2.09 கோடி வழங்கப்பட்டது. இததிட்டத்தின் கீழ் 44,742 மாணவிகளுக்கு 18 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வினாடி வினா, பாட்டு, நடனம் மற்றும் பேச்சுப் போட்டிகள் மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.