சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார்

நலத்திட்ட உதவிகள்

Update: 2024-08-15 06:27 GMT
இந்திய திரு நாட்டின் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 374 பயனாளிகளுக்கு ரூ.3கோடியே 29லட்சத்து 81ஆயிரத்து 423 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கினார். இந்திய திரு நாட்டின் சுதந்திர தினவிழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 9.05 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 374 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 81ஆயிரத்து 423 மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 288 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனையடுத்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். விழாவில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அதர்ஷ் பச்சேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருள் நேரு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ| மாணவிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

Similar News