சேலம் சூரமங்கலம் செஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 36). பொக்லைன் உரிமையாளர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நண்பர் சின்னாவுடன் ராசிபுரம் சென்று விட்டு மீண்டும் சேலம் வந்து கொண்டிருந்தார். சீலநாயக்கன்பட்டி தேவா திருமண மண்டபம் அருகில் வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், சின்னா இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சின்னா பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.