எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்லூரி மாணவிகளின் பேரணி

விழிப்புணர்வு பேரணி

Update: 2024-08-16 12:27 GMT
பெரம்பலூரில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்லூரி மாணவிகளின் பேரணி நடைபெற்றது .... பெரம்பலூர் மாவட்ட எய்ம்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படு அலகு சார்பில், எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர், இதனை தொடர்ந்து கல்லூரி செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பேரணியை மருத்துவ மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து கொடியசைத்து துவக்கி வைத்தார் பாலக்கரை பகுதியில் தொடங்கிய இப்பேரணி, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே வட்டாச்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது இப்பேரணியில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரணியாக சென்றனர்

Similar News