கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே தகரப்புதூர் ஊராட்சியை சேர்ந்த நல்லதம்பி மகன் கோபி (வயது 29), கூலி தொழிலாளி. இவருடைய தங்கை குடும்பத்துக்கும், கோபி குடும்பத்துக்கும் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரு தரப்பினர் மோதிக்கொண்ட தகராறில் கோபி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமணிதாசன் என்பவரை கைது செய்தனர். கைதான பூமணிதாசன், கோபியின் மைத்துனர் ஆவார்.