திருச்செங்கோட்டில் புறநகர் பேருந்து நிலையம் வேண்டாம் என பாஜக மனு
திருச்செங்கோட்டில் புறநகர் பேருந்து நிலையம் வேண்டாம் என பாஜக மனு
திருச்செங்கோடு நகரில் புதியதாக விரிவுபடுத்தப்பட உள்ள பேருந்து நிலையம் நகருக்கு வெளியே இருப்பதால் அது பொதுமக்களுக்கு பயன் தராது எனக்கூறி வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறியாளர் சரவணன் ஆகியோரிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்செங்கோடுபாஜக நகர தலைவர் செங்கோட்டுவேல் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ்குமார், சுபாஷ், மாவட்ட செயலாளர் பூங்குழலி, மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் செந்தில், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வேல்முருகன், அமைப்பு சாரா மக்கள் பிரிவு தலைவர் ஐய்யப்பன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய தலைவர் சங்கர், திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய தலைவர் பன்னீர், நகர பொறுப்பாளர்கள் சதீஷ் , பூபதி பாஸ்கர், ரவி, கோபி, சீனிவாசன், மோதிலால், மதியழகன், முத்துக்குமார், சேகர், பட்டியல் அணி நிர்வாகிகள் செங்கோட்டையன், பழனிவேல், சக்கரபாணி, பெரியசாமி, ராஜவேலு, பாமக நகரத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவி சொந்தங்கள் கலந்து கொண்டனர்