ரயில் பயணிகள் மீது கற்களை எரிந்த அரசு பள்ளி மாணவர்கள்
மும்பையில் இருந்து திருத்தணி வழியாக நாகர்கோவில் சென்ற அதிவிரைவு ரயில் பயணிகள் பெட்டி கல் எரிந்து ஜன்னலை உடைத்த கஞ்சா போதை அரசு பள்ளி மாணவர்கள் செயல் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் ரயில்வே போலீசார்
மும்பையில் இருந்து திருத்தணி வழியாக நாகர்கோவில் சென்ற அதிவிரைவு ரயில் பயணிகள் பெட்டி கல் எரிந்து ஜன்னலை உடைத்த கஞ்சா போதை அரசு பள்ளி மாணவர்கள் செயல் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் ரயில்வே போலீசார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் வழியாக மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் எண் -16351 மேற்கண்ட இந்த ரயில் திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பொழுது ரயில்வே கோட்டர்ஸ், பழைய காவல் நிலையம் ரயில்வே தண்டவாள பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் வேகமாகச் சென்ற மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் பி-3 கோச், சீட் எண்-39,40, ஆகிய பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடியை கல் எரிந்து உடைத்துள்ளனர், இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது ஆனால் உள்ளே இருந்த ரயில் பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பி உள்ளனர் இந்த சம்பவம் குறித்து அதிவிரைவு ரயில் ஓட்டுநர் அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கும் மற்றும் ரயில்வே போலீசாருக்கும் தகவல் அளித்தனர் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பள்ளியின் சீருடை உடன் கஞ்சா போதையில் இந்த பகுதியில் நின்று கொண்டு மும்பையில் இருந்து நாகர்கோவில் சென்ற அதிவிரைவு ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை கல் எரிந்து உடைத்துள்ளனர் என்று ரயில்வே ஊழியர் உறுதிப்பட தெரிவித்ததின் பேரில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர்களை ரயில்வே போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர் கஞ்சா போதையில் அரசு பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.