பெரிய பாலம் மயானம் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டதால் தகராறு. இளைஞர்கள் இருவர் மீது வழக்கு பதிவு.

பெரிய பாலம் மயானம் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டதால் தகராறு. இளைஞர்கள் இருவர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-08-21 11:30 GMT
பெரிய பாலம் மயானம் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டதால் தகராறு. இளைஞர்கள் இருவர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், குளித்தலை, நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கார்த்திக் வயது 27. இதே போல, கரூர் மாவட்டம், குளித்தலை, பெரிய பாலம், மலையப்பா நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் ஜீவா வயது 22, மூர்த்தி மகன் தினேஷ் வயது 25. இவர்கள் இருவரும் பெரியபாலம் பரிசல் துறை பகுதியில் உள்ள மயானம் அருகே ஆகஸ்டு 20ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார்த்தி மது அருந்தியவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தினேஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் கார்த்திக்கை தாக்கி உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்தி மற்றும் ஜீவா ஆகிய இருவருக்கும் உள் காயம் ஏற்பட்டதால் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜீவா மற்றும் தினேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் குளித்தலை காவல்துறையினர்.

Similar News