மணல்மேடு- தனியார் பிளைவுட் கம்பெனியில் பணியின் போது தலையில் இரும்பு குழாய் விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

மணல்மேடு- தனியார் பிளைவுட் கம்பெனியில் பணியின் போது தலையில் இரும்பு குழாய் விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

Update: 2024-11-19 09:27 GMT
மணல்மேடு- தனியார் பிளைவுட் கம்பெனியில் பணியின் போது தலையில் இரும்பு குழாய் விழுந்து இளைஞர் உயிரிழப்பு. மயிலாடுதுறை மாவட்டம், காவிரி நகர், புது தெருவை சேர்ந்தவர் முத்து மகன் கவியன் வயது 19. இவர் உதவி தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில், கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் செயல்படும் சபரி பிளைவுட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நவம்பர் 9ஆம் தேதி பணியில் சேர்ந்த அவர் தொடர்ந்து அங்கேயே தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நவம்பர் 17ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில், மேலே கண்ட நிறுவனத்தில் ஏர் பைப்லைன் அருகே பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, 3- இன்ச் நீளம் கொண்ட இரும்பு ஏர் பைப் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த போது, அது பணியில் இருந்த கவியன் இடது தலை மீது விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த கவியன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த கவியனின் மாமா செல்வராஜ் வயது 49 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கவியனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News